கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

சூப்பர் டீலக்ஸ் இதோட காப்பி தானா, வீடியோவுடன் இதோ

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தை தியாகராஜா குமாரராஜா இயக்க, சமந்தா, பஹத் பாசில், ரம்யா கிருஷ்ணன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆனது, எல்லோருக்குமே இந்த ட்ரைலர் பிடித்துள்ளது. குறிப்பாக இதில் விஜய் சேதுபதி டயலாக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, ட்ரைலர் முழுவதும் அவர் வேகவேகமாக பேசும் அந்த வசனத்தை பலரும் டிக்-டாக் கூட செய்தனர்.

ஆனால், அந்த வசனத்தை பல வருடங்களுக்கு முன்பே ஜெமினி கணேஷன் தன் படத்தில் பேசியுள்ளார், இது ஒரு பாட்டி வடை சுட்டது கதை போல் காமன் கதை என்றாலும், தற்போது அந்த ஜெமினி கணேஷன் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

Related Articles

Close