சின்னத்திரைலேட்டஸ்ட்

சீரியலுக்கு குட்பை சொன்ன வாணி போஜன்

சின்னத்திரையில் பிரபலமான நடிகை வாணி போஜன், ‘ஓ மை கடவுளே, லாக்கப்’ ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இப்போது நான்கைந்து படங்களில் நாயகியாக நடிக்கிறார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வருவதால் சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமாவில் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். இனி டிவி சீரியல்களில் நடிக்க நேரம் இருக்காது. ஏனென்றால் சீரியல்கள் ஆண்டுக்கணக்கில் ஓடும், இனி ஆண்டுதோறும் நடிக்க முடியாது. தற்போது 4 படங்களில் நடிக்கிறேன். இவற்றில் விதார்த் உடன் படம் ரொம்பவே வித்தியாசமானது. வெளிமாநிலம் என்றாலும் தமிழ் நன்றாக பேசுவேன். இதை கடவுள் கொடுத்த வரமாக எண்ணுகிறேன் என்கிறார் வாணி.
Related Articles

Close