பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

சீனாவில் ஒரே நாளில் 10 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்திய இந்திய படம்!

இந்தியாவில் வெளியான பிறகு சில படங்கள் வசூலுக்காக சில அனுமதிகளை பெற்று சீனாவில் திரையிடப்படும். மிக குறைவான எண்ணிக்கை கொண்ட இந்த படங்களில் விஜய்யின் மெர்சலும் ஒன்று. இந்த படங்களின் வரிசையில் புதியதாக இணைந்த படம் மறைந்த நடிகை ஸ்ரீதேவி நாயகியாக நடித்து கடைசியாக வெளிவந்த மாம். 2017ம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படத்திற்காக ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைகக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.

மாம் படத்தை சீனாவில் 38,500 தியேட்டர்களில் வெளியிட்டனர். முதல் நாளிலேயே இந்தப் படம் 9.8 கோடி ரூபாயை வசூலித்து, முதல் நாள் வசூலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கூறுகையில், மாம் எங்களது இதயத்திற்கு நெருக்கமான ஒரு படம். சீனாவில் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இப்படி ஒரு வரவேற்பு சீனாவில் கிடைத்திருப்பதைப் பார்ப்பதற்கு ஸ்ரீதேவி இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

Image result for mom movie china

Related Articles

Close