கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

சிறுத்தை சிவாவுடனான படத்தை உறுதி செய்த சூர்யா! எதிர்பாராத நேரத்தில் நேரலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேட்ட கேள்வி

நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக NGK படம் செல்வராகவன் இயக்கத்தில் வருகிற 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலையாக ரசிகர்களை சமீபத்தில் நேரலையில் சூர்யா சந்தித்தார்.

இதில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதை உறுதி செய்தார். அடுத்ததாக தான் நடிக்கவுள்ள இயக்குனர்களின் பெயர்களை அவர் கூறுகையில் அதில் சிறுத்தை சிவாவின் பெயரும் இருந்தது.

ஜோதிகாவுடன் மீண்டும் நடிப்பீர்களா என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, நிச்சயம் நடக்கும் என நினைக்கிறேன், இன்று காலையில் கூட அப்படத்திற்கு ஏற்ற ஒரு கதை கேட்டேன் என்றார்.

மேலும், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் இதில் கலந்துகொண்டு, CSK அணியில் உங்களுக்கு பிடித்த வீரர் யார் எதற்காக? என கேட்ட கேள்விக்கு, தோணி தான் என சூர்யா பதில் கூறினார்.

Related Articles

Close