சின்னத்திரைபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

சின்னத்திரைக்கு வரவிருக்கும் பிரபல முன்னணி நடிகை! ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா

பாலிவுட் நடிகர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தோன்றுவதை அதிகம் விரும்புகிறார்கள். அதற்கு காரணம் இந்தி நிகழ்ச்சிகளுக்கு பல மாநில பார்வையாளர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் நடிகை கத்ரினா கைப்.

இந்தியில் பிரபலமான டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றப் போகிறார் கத்ரினா. இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் ஜீ இந்தி தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக கத்ரினாவுக்கு ஒரு மணி நேரம் கொண்ட ஒரு எபிசோடுக்கு 10 லட்சம் சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு நாளைக்கு குறைந்தது 5 எபிசோட்கள் எடுக்கப்படுகிறதாம். அப்படியானல் கத்ரினாவின் ஒரு நாள் சம்பளம் 50 லட்சம் என்கிறார்கள். இந்திய தொலைக்காட்சிகளில் அதிக சம்பளம் பெறும் நடிகை கத்ரினா தான் என்கிறார்கள்.

இதுகுறித்து கத்ரினா கூறுகையில், சினிமாவை விட டி.வி நிகழ்ச்சிக்கு அதிக உழைப்பை கொடுக்க வேண்டியதிருக்கிறது. ஒரு நாளைக்கு 12 மணிநேரம் உழைக்கிறோம். எனவே அதற்குரிய சம்பளத்தை எதிர்பார்ப்பது நியாயம்தானே. ஆண் நடுவர்களுக்கு என்ன சம்பளமோ அதையே நானும் பெறுகிறேன். ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யக்கூடாது. இரவு சாப்பாட்டை குழந்தைகளுடன் சாப்பிட வேண்டும். இப்படி சில பாலிசி வைத்திருக்கிறேன். அதையும் மீறித்தான் தொலைக்காட்சியில் பணியாற்றுகிறேன் என்கிறார் கத்ரினா.

Related Articles

Close