கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

சினிமாவுக்கு குட்பை சொல்லும் அனுஷ்கா? அதிர்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு நடிகை கொடுத்த விளக்கம்

நடிகை அனுஷ்கா கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக எந்த படத்திலும் நடிக்காமல் உள்ளார். அவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, அதற்காக மணமகன் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அனுஷ்கா சினிமாவிற்கு குட்பை சொல்லிவிட்டார் என்று தகவல் பரவி வருகிறது.

வருடக்கணக்கில் எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கும் அவர் அடித்து சைலென்ஸ் என்கிற படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்புவெளிவந்து பல மாதங்கள் ஆகியும் அது பற்றிய அடுத்தக்கட்ட விவரங்கள் எதுவும் வெளிவரான நிலையில் அனுஷ்கா பற்றி இப்படி ஒரு வதந்தி பரவியுள்ளது.

அதில் உண்மையில்லை என அனுஷ்கா தரப்பில் தற்போது விளக்கம் கொடுத்துள்ளனர். சைலென்ஸ் படத்தில் மைகேல் மாட்ஸன் என்கிற ஹாலிவுட் நடிகர் முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனவும், ஷூட்டிங் விரைவில் துவங்கும் என்று தற்போது விளக்கம் கொடுத்துள்ளனர்.

Related Articles

Close