பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பிரபல மொடல்

கேன்சருக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல மாடல் திடீரென உயிரிழந்திருப்பது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட், கடந்த சில மாதங்களாகக் கடும் சோதனைகளைச் சந்தித்து வருகிறது.

பல முக்கிய நட்சத்திரங்களை இழந்திருக்கிறது. இது இன்னும் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல நடிகர் இர்ஃபான்கான், தொடர்ந்து ரிஷி கபூர், அவரைத் தொடர்ந்து சுஷாந்தின் தற்கொலை என தற்போது மரணங்கள் அதிகரித்து வருவது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகர், நடிகைகளும் வாய்ப்புகளை இழந்ததால் மன அழுத்தம் காரணம் தற்கொலை செய்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வேளையில், பிரபல முன்னாள் மாடலும் பாலிவுட் பேஷன் டிசைனருமான சிமர் துகல்(52) திடீரென மரணமடைந்திருப்பது பாலிவுட்டில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிமர் துகல் கடந்த சில வருடங்களாக கேன்சருக்கு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். திருமணத்துக்குப் பிறகும் மாடலிங்கில் சிமர் துகல் கலக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
குறித்த மொடலின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பிரபல மொடல்... சோகத்தில் திரைத்துறையினர் -  Manithan

Related Articles

Close