கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குடுத்து படத்தில் படுகவர்ச்சியாக நடித்து பாப்புலர் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பிறகு அவர் பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதிலும் அவர் கவர்ச்சி காட்டியதால் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் சமீபத்தில் தன் காதலருடன் சென்னையில் உள்ள குயின்ஸ்லேண்ட் தீம் பார்க்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை பார்த்த ரசிகர்கள் செல்பி எடுப்பது, ஆட்டோக்ராப் வாங்குவது என அவரை சூழ்ந்துகொண்டனர்.

அப்போது சிலர் ரூபாய் நோட்டை யாஷிகாவிடம் நீட்ட அதிலும் யாஷிகா ஆட்டோக்ராப் போட்டு கொடுத்துள்ளார். அந்த வீடியோ வெளியாகி தற்போது யாஷிகாவை சர்ச்சையில் சிக்கவைத்துள்ளது.

கரென்சி நோட்டில் எழுதுவது சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close