கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

சர்ச்சைக்குரிய படத்தின் ரீமேக்கில் களமிறங்கும் இளம் நடிகை! இதுவரை எந்த நடிகையும் செய்யாதது

தற்போது சினிமா முற்றிலும் புதிய பரிமாணமாக டிஜிட்டல் மயமாகி வருகிறது. அவ்வகையில் சமீப காலமாக பெரிதும் வரவேற்பை பெற்ற ஒன்று வெப் சீரிஸ்.

தற்போது இந்த கொரோனா காலத்தில் புது படங்களே ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. இதனால் வெப் சீரிஸில் பெரிய நடிகர்கள், நடிகைகள் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அவ்வகையில் தெலுங்கு சினிமாவை சேர்ந்த இளம் நடிகர் ஈஷா ரெபா ஹிந்தியில் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் வெளியாகி சர்ச்சையான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
இப்படம் வெப் சீரிஸ் போல எடுக்கப்பட்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்படவுள்ளதாம். லஸ்ட் ஸ்டோரில் படத்தில் ஆபாச காட்சிகளும், சுய இன்பம் காட்சிகளும் இடம் பெற்று சர்ச்சையானது.

ஈஷா தமிழில் ஜி.வி.பிரகாஷுடன் ஆயிரங்கள் ஜென்மங்கள் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Articles

Close