கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது.

அதற்கு பிறகு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி விஜய்யை வைத்து சர்கார் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தது. அதற்கிடையில் பல படங்களை விநியோகம் செய்து கொண்டிருந்தது சன் தயாரிப்பு நிறுவனம்.

2018ஆம் ஆண்டிற்கு பிறகு சர்கார், பேட்ட, காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை தனது நிறுவனத்தின் மூலம் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக 5 முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
1. ரஜினி நடிப்பில் { அண்ணாத்த }

2. விஜய் நடிப்பில் { தளபதி 65 }

3. தனுஷ் நடிக்கும் { D44 }

4. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம்

5. ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம்.

மொத்தம் 5 முன்னணி நடிகர்களின் படங்களை தனது தயாரிப்பின் கையில் சன் பிக்சர்ஸ் வைத்துள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளது.

Related Articles

Close