கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

கொரோனா தொற்று : எஸ்.பி.பி., நலமாக உள்ளார் – எம்.ஜி.எம். மருத்துவமனை

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ள பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(74) கொரோனாவால் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். ஹேல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்றே இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார் எஸ்.பி.பி. அதில், ”நான் நலமாக உள்ளேன். காய்ச்சல் குறைந்துவிட்டது. லேசாக சளி தொற்று மட்டுமே உள்ளது. இரண்டொரு நாளில் வீடு திரும்புவேன்” என கூறியிருந்தார்.
இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், லேசான கொரோனா அறிகுறி இருந்ததால் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் நலமாக உள்ளார். எங்களது மருத்துவ குழு அவருக்கு சிறப்பான சிகிச்சை கொடுத்து வருகிறது. இயற்கையான முறையிலேயே அவர் மூச்சு விடுகிறார். தனக்காக பிரார்த்தனை செய்த தனது நலம் விரும்பிகள் அனைவருக்கும் எஸ்.பி.பி. நன்றி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Articles

Close