தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

குழந்தைகளுக்கு புது வீடு வாங்கிய பவன் கல்யாண்! விலை இத்தனை கோடியா?

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் பவன் கல்யாண். இவர் தற்போது பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இது வருவதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்த படம் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் தற்போது பவன் கல்யாண் ஹைதராபாத்தின் Outer Ring Roadக்கு அருகில் ஒரு விலையுயர்ந்த புது பிளாட்டை வாங்கியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.தனது இரண்டு குழந்தைகளுக்காக தான் 5 கோடி செலவு செய்து பவன் கல்யாண் இந்த வீட்டை வாங்கியுள்ளார். விவாகரத்துக்கு பிறகு புனேவில் வசித்துவரும் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி கூடிய விரைவில் ஹைதராபாத்துக்கு திரும்புகிறார் எனவும் செய்திகள் வருகிறது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர்களுக்கு அருகில் இருக்க ரேணு தேசாய் முடிவெடுத்துள்ளாராம்.

\

Tags

Related Articles

Close