கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

காரில் மது பாட்டில்கள் கடத்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கைது

உலகின் வயதான ஹீரோ என்ற புகழ்பெற்ற நடிகர் சாருஹாசன் கதாநாயகனாக நடித்த ‘தாதா 87’ என்ற திரைப்படத்தை எடுத்த தயாரிப்பாளர் மது கடத்தல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டிருப்பது கோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் காரணத்தினால் மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பக்கத்து மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து மது கடத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுவதால் போலீசார் இதுகுறித்து மாவட்ட, மாநில எல்லைகளில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பூந்தமல்லி போலீசார் நேற்று ரோந்து சோதனையில் ஈடுபட்டிருக்கும்போது சந்தேகத்துக்குரிய ஒரு வாகனம் வருவதை கண்டுபிடித்தனர். அதை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 248 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அந்த வாகனத்தில் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக ’போலீஸ்’ என்ற போர்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அந்த வாகனத்தில் இருந்தவர்களை விசாரித்த போது அதில் ஒருவர் ’தாதா 87; படத்தை தயாரித்த கலைச்செல்வன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது கார் மற்றும், காரில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Articles

Close