லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

காதலை விரும்பும் அனைவரும் பார்க்கவேண்டிய மியூசிக்கல் படம் ‘A Star is born’

Bradly cooper இன் அறிமுக இயக்கத்தில் Lady Gaga இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் படம் A Star is born. காதலும் தேவ்தாஸ் கதையும் அழியாத கோலம். காலங்கள் மாறினாலும் இக்கதைகள் மீளுருவாக்கத்தில் எப்போதும் இருக்கின்றன. எந்த தலைமுறைக்கும் மாறாத கதைகளில் ஒன்று காதல். இந்தப்படத்தின் கதையும் மீண்டும் மீண்டும் உருவாக்கத்தில் இருந்திருக்கிறது.


1937 ல் இதே கதையில் எடுக்கப்பட்ட படத்தின் மறுபதிப்பே இது. இடையில் மியூசிக்கலகாவும், ராக் ஆல்பமாகவும் சுற்றித்திரிந்து இப்போது மீண்டும் படமாகியிருக்கிறது. இந்தியாவிற்கு இது புதிதல்ல இந்தியில் சக்கை போடு போட்ட ஆஸிக்கி 2 படம் இந்தப்படத்தின் ரிமேக் தான்.

ஆஸிக்கி 2 வின் உருவாக்கம் இதில் இல்லை. இதில் ஒரு நெருங்கிய இயல்பு தன்மை படம் முழுதும் இருக்கிறது. படத்தின் பலமும் பலவீனமும் இது தான்.

குடிகார ராக் ஸ்டார் ஒருவன் ஒரு பெண்ணை கண்டடைந்து அவள் மேல் காதல் கொள்கிறான். அவனின் வெளிச்சத்தில் அவனைத்தாண்டி அவள் வளரும்போது அவன் குடியில் வீழ்கிறான். அவள் காதலால் மீட்டெடுக்கப்படும் அவன் ஒரு கட்டத்தில் அவளின் வாழ்விற்கு இடையூறாக இருக்கிறோம் என நினைத்து அவன் எடுக்கும் முடிவு தான் படம்.


நெருக்கத்தில் ஒரு காதலை வாழும் உணர்வை தருகிறது படம். மிகப்பெரிய பிரமாண்ட வட்டத்தில் உள்ள Bradly cooperயிடமிருந்து இப்படியான் படம் எதிர்பாராதது. அவர் இதை ஒரு எளிமையான மொழியில் சொல்லியிருக்கிறார். முழுக்க முழுக்க ஒரு மியூசிக்கல் படம் பார்த்த உணர்வைத் தருகிறது படம்.

காதலை விரும்பும் அனைவரும் ஒரே ஒரு முறை சந்தித்து வரலாம்.

 

Related Articles

Close