பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

காதலரை மணந்தார்- பிரியங்கா சோப்ராவுக்கு இன்று இந்து முறைப்படி திருமணம்

பிரபல இந்தி நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் கால் பதித்து பிரபலம் அடைந்தார். அவருக்கும் அமெரிக்க பாடகரும் ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோன சுக்கும் காதல் ஏற்பட்டது.

இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றித்திரிந்தனர். பிரபலமான இந்த ஜோடிக்கு சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது.

பிரியங்கா சோப்ரா இந்து மதத்தை சேர்ந்தவர், நிக் ஜோனஸ் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இரண்டு மத முறைப்படியும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனையில் கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது.

பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் ஜோடி பாதிரியார் முன்பு மண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதில் மணமக்களின் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், நடிகர்- நடிகைகள் பங்கேற்றனர்.

இன்று இந்த ஜோடிக்கு இந்து முறைப்படி திருமணம் நடந்தது. வேத மந்திரங்களுடன் திருமண சடங்குகள் நடைபெற்றன. பிரியங்கா சோப்ரா கழுத்தில் நிக் ஜோனஸ் தாலி கட்டினார்.

திருமண ஜோடிக்கு ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாடலும் நடிகையுமான ஜிசலே புன்ட்செர், நடிகர் மைக்கேல் பி. ஜோர்டன், இந்தி நடிகை அலியாபட் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.

பிரியங்கா சோப்ராவை விட நிக்ஜோன்ஸ் 10 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. #PriyankaChopramarriage #NickJonas #wedding

Related Articles

Close