நிகழ்வுகள்லேட்டஸ்ட்

காக்கா முட்டை பட பாணியில் சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இயக்குனர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படம் தேசிய விருது பெற்றது. அதில் வறுமையில் வாடும் இரண்டு சிறுவர்களின் வாழ்க்கை தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருந்தது அனைவரையும் ஈர்த்தது. இந்த படத்தில் ரயிலில் படியில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் கையில் இருக்கும் செல்போனை கம்பால் அடித்து பிடுங்குவது போல் ஒரு சீன் இருக்கும்.

அதுபோல இன்று சென்னையில் நிஜத்திலேயே ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லூருக்கு செல்லும் ரயிலில் படியில் நின்றபடி இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார். சென்னை திருவெற்றியூர் அண்ணாமலைநகர் ரயில்வே கேட் அருகே ரயில் மெதுவாக சென்ற போது கீழே இருந்த 3 சிறுவர்கள் கம்பால் அவரிடம் இருந்த செல்போனை தாக்கியுள்ளனர்.

அதனால் கீழே விழுந்த அவர் ரயில் சக்கரத்தில் சிக்கி, ஒரு கால் துண்டானது. அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Related Articles

Close