சின்னத்திரைலேட்டஸ்ட்

களத்தில் இறங்கும் புதுசீரியல்! திருமணத்திற்கு முன் நடக்கும் எதிர்பாராத அசம்பாவிதம் – ஹீரோ ஹீரோயின் இவங்க தான்

சின்னத்திரை சீரியல்கள் இன்று மக்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கிறது. இதனால் டிவி சானல்களிடையே கடும் போட்டி ஏற்பட்டு வருகிறது. தொலைக்காட்சிகளுக்கே உரிய TRP லிஸ்டில் இடம் பிடிப்பதற்காக புதுபுது முயற்சிகளை செய்கிறார்கள்.

சீரியல்களை பொறுத்தவரை இன்றும் முதலிடத்தில் இருப்பது சன் டிவி தான். மேலும் இதில் நடிகை ராதிகாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இதில் வரும் பல சீரியல்களை அவர் தான் தயாரிக்கிறார்.

அண்மையில் அவரின் வாணி ராணிக்கு பிறகு தற்போது சந்திர குமாரி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக செல்வ மகள் என்னும் புது சீரியல் நாளை முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

இதில் கன்னடத்தில் வந்த தேவயானி சீரியலினின் டப்பிங் வெர்சனாம். அதோடு இதில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஜோடி ரகு மற்றும் ராஷ்மி ஜெயராஜ் தான் நடிக்கிறார்களாம்.

இதை சுந்தரேஷ் தயாரிக்க கிரிஜா மஞ்சுநாத் என்பதை கதை எழுதியுள்ளார்.

Related Articles

Close