கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் தமன்னா

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தமன்னா. சுமார் 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்து வருகிறார். பாகுபலி படத்திற்கு பிறகு தற்போது, சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் புரட்சிகர பெண்ணாக நடிக்கிறார்.
உதயநிதியுடன் சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் தான் நடிக்கும் வேடம் பற்றி தமன்னா கூறியதாவது, சிரஞ்சீவியுடன் நடிக்க வேண்டும் என்கிற எனது கனவை நனவாக்கி இருக்கிறது.
அதற்காக இயக்குனர் சுரேந்தர் ரெட்டிக்கு நன்றி சொல்ல வேண்டும். சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்தது பெருமையாக உள்ளது. படத்தை திரையில் காண ரசிகர்கள் போல் ஆவலுடன் காத்திருக்கிறேன்’ இவ்வாறு அவர் கூறி இருக்கிறார். #SyeraaNarasimhaReddy #Tamannaah

Related Articles

Close