கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

கத்தி படப்பிடிப்பில் தனது கன்னத்தில் அறைய வந்தவரிடம் விஜய் சொன்ன பஞ்ச் டையலாக்! ருசிகர தகவல்

கத்தி படம், விஜய்யின் நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். விவசாயத்தை பற்றியும் நிலத்தடி நீரை பற்றியும் ஆழமாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருப்பார். இப்படத்தில் விஜய்யின் கன்னத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் அறைவது போன்று ஒரு காட்சி இருக்கும். அக்காட்சியில் நடித்த டேவிட் என்பவர் அந்த அனுபவத்தை பற்றி தற்போது பேசியுள்ளார்.

அதில், எனக்கு இப்படி ஒரு காட்சி இருப்பது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும்வரை தெரியாது. இதை இயக்குனர் சொன்னவுடன் பயந்தேன். அந்த காட்சிக்காக பயிற்சி எடுத்து கொண்டிருந்த போது விஜய் சார், சார் பாத்து சார் மேல கீழ கை பட்ற போது, பிரச்சனை ஆயிடும் சார் என பஞ்ச் டயலாக் மாதிரி அவர் சொல்ல எனக்கு இன்னும் பயம் அதிகமாகிவிட்டது என்றார்.

Related image

Related Articles

Close