கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம் செய்த விஜய் பட நடிகை!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. இவர் அதன் பின்னர் விஜய் நடித்த ’வேலாயுதம்’ மற்றும் ’சச்சின்’ ஆகிய திரைப்படங்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெனிலியா கடந்த 2012ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் மருத்துவர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நடிகை ஜெனிலியாவும் அவரும் அவருடைய கணவரும் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இதுகுறித்து ஜெனிலியா தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

நீண்ட நாட்களாகவே நானும் எனது கணவரும் உடல் உறுப்பு தானம் குறித்து யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அதற்கான நேரம் அமையாமல் இருந்தது. இந்த நிலையில் மருத்துவர் தினத்தில் எங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளோம். அடுத்தவர்களுக்கு நாம் தரும் மிகப்பெரிய பரிசு நமது வாழ்க்கை தான். மற்ற உயிர்களை காப்பாற்ற இதுபோல் அனைவரும் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்’ என்று ஜெனிலியா கேட்டுக் கொண்டுள்ளார். ஜெனிலியா மற்றும் தேஷ்முக்கின் இந்த உடல் உறுப்பு தானம் அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது.

Related Articles

Close