கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

கடைசியாக பாடகர் எஸ்.பி.பி பேசிய விஷயம் இதுதான்

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறிது நாட்களில் அவர் குணமாகி வீடு திரும்புவார் என்று பார்த்தால் நோயின் தாக்கம் அதிகமாகி மிகவும் சீரியஸான நிலைமையில் இருந்தார்.

அன்றிலிருந்து அவரது உடல்நிலை நிலவரம் குறித்து அவரது மகன் எஸ்.பி. சரண் மக்களுக்கு கூறிக் கொண்டே இருந்தார். ஆனால் இன்று நம்மை எல்லாம் விட்டு பிரிந்தார் எஸ்.பிபி.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடனே ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் சில அறிகுறிகள் இருந்ததால் வீட்டில் இருப்பவர்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று மருத்துவமனைக்கு வந்துள்ளேன்.

இன்னும் 2,3 நாட்களில் வீடு திரும்பிவிடுவேன், யாரும் பயப்பட வேண்டாம் என எஸ்.பி.பி ஒரு வீடியோ வெளியிட்டார். அதுவே அவர் மக்களிடம் பேசிய கடைசி வீடியோவாக அமைந்துவிட்டது.

Related Articles

Close