சின்னத்திரைலேட்டஸ்ட்

ஓவியா-ஆரவ் நிரந்தரமாக பிரிந்தனர்?

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே நடிகை ஓவியா ஆரவ்வை காதலித்து வருவதாக கூறிவருகிறார். ஆனால் ஆரவ் அவரை பொறுப்படுத்தவில்லை என்றாலும் ஓவியா விடுவதாக இல்லை.

கடந்த சில நாட்களாக ஓவியா செய்யும் செயல்கள் தன்னை வெறுப்பேற்றுவதாக ஆரவ் பிக்பாஸிடம் இன்று புகாரளித்துவிட்டார். படுக்கையில் அருகில் படுத்துக்கொள்வது, முத்தம் கேட்பது என ஓவியா தன்னை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கிவிடுகிறார் என ஆரவ் குற்றம் சாட்டினார். அதை கேட்ட பிக் பாஸ் “நீங்களே பேசி சுமூகமாகதீர்த்துக்கொள்ளுங்கள்” என கூறிவிட்டார்.

இந்நிலையில் நாளை வரவுள்ள பிக்பாஸ் ஷோவில் ஓவியா-ஆரவ் இடையே இதனால் சண்டை வெடித்தது போல டீசரில் காட்டப்பட்டது. மேலும் ஓவியா ‘கெட் லாஸ்ட்” என கூறிவிட்டு சென்றுவிட்டார். அதனால் அவர்கள் நிரந்தரமாக பிரிந்துவிட்டார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன நடந்தது என்பது நாளை தான் தெரியவரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Close