கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

ஒரு வழியாக சிம்பு எடுத்த முடிவு, ரசிகர்கள் உற்சாகம்

சிம்பு தமிழ் சினிமாவில் நல்ல ரசிகர்கள் பலத்தை கொண்ட நடிகர். ஆனால், சரியான நேரத்திற்கு படப்பிடிப்பு வராதது, டப்பிங் பேச வராதது, ஏன் ஷுட்டிங்கே வராதது என பல பிரச்சனைகள் அவரை சுற்றி இருந்தது. இவரை நம்பி வந்த சுரேஷ் காமாட்சியே தற்போது சிம்பு செய்த வேலையால் அச்சத்தில் தான் உள்ளார், இதனால், சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் சிம்புவின் அம்மா அவருக்காக பேச வந்தார்.



அப்போது சிம்புவிடம் படப்பிடிப்பு நடக்கும் போது எந்த ஒரு பிரச்சனையும் செய்ய கூடாது, அப்படி செய்து எங்களுக்கு ஏதும் நஷ்டம் வந்தால் அதற்கு சிம்பு பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு அக்ரீமெண்ட் கேட்டுள்ளனர். அதற்கு ஒரு வழியாக சிம்பு தற்போது சம்மதித்துவிட்டாராம், அதனால், எப்போது வேண்டுமானாலும் மாநாடு தொடங்கலாம் என்பதே ரசிகர்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி.

Tags

Related Articles

Close