பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

ஒரு நடிகையை மட்டும் திருமணத்திற்கு அழைக்காமல் விட்ட தீபிகா படுகோன்

சமீபத்தில் நடிகை தீபிகா படுகோன் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்டார். திருமணம் வெளிநாட்டில் நடந்தாலும் இந்தியாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

நேற்றுமுன்தினம் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஷாருக்கான், அமிதாப் உட்பட இந்திய சினிமாவில் பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு நடிகையை மட்டும் தீபிகா அழைக்கவே இல்லையாம். நடிகை கங்கனா ரணாவத் தான் அது.

கடந்த சில வருடங்களாகவே தீபிகா மற்றும் கங்கனா இடையே வெளிப்படையாகவே மோதல் போக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பேட்டிகளில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக்கொண்டதும் பலமுறை நடந்துள்ளது.

Related Articles

Close