பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

ஏ.ஆர்.ரஹ்மானை பாலிவுட் ஒதுக்க இதுவும் ஒரு காரணம் ?

கடந்த சில தினங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட் சினிமா தன்னை புறக்கணிக்கிறது என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். குறிப்பாக ஆஸ்கர் விருது பெற்ற பிறகுதான் அவர் இவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார் என்பது அவர் பேச்சிலிருந்து நன்றாகவே தெரிகிறது.. ஆனால் பாலிவுட்டிலோ ஏ.ஆர்.ரஹ்மான் ஒதுக்கப்படுவதற்கு வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.
பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர், தான் தயாரிக்கவிருந்த படம் ஒன்றுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை அணுகியபோது, அந்த பாடல்களுக்கான காப்பிரைட்ஸ் தனக்குத்தான் வேண்டும் என கேட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான். பொதுவாக பாலிவுட்டில் காப்பி ரைட்ஸை அப்படி கொடுப்பது வழக்கம் இல்லை என்பதால், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலாக சங்கர்-எசன்-லாயை ஒப்பந்தம் செய்தாரம் கரண் ஜோஹர். பல தயாரிப்பளர்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்காக விதிகளை மாற்ற விரும்பவில்லையாம். அதனால்தான் ஏ.ஆர்.ரஹ்மானை அணுகுவதற்கு யோசித்து தயங்கி நின்று விடுகிறார்களாம். இதுதான் ஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட்டில் புறக்கணிக்கப்படுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டது என்கிறார்கள்.
Related Articles

Close