லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரகுமானை தொடர்ந்து மார்வெல் படத்தில் இணைந்த தமிழ் முன்னணி நடிகர்! அதிகாரபூர்வ அறிவிப்பு

உலகமே தற்போது ஒரு படத்துக்காக காத்துகொண்டிருக்கிறது என்றால் அது அவெஞ்சர்ஸ் கடைசி பாகம் படத்துக்குதான் என்பது குழந்தைகளுக்கும் தெரியும். ஏற்கனவே வெளியான முதல் மூன்று பாகங்கள் வசூலில் இமாலய சாதனைகள் படைக்க நான்காம் மற்றும் கடைசி பாகம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவு இப்படத்தை இந்தியாவில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து வருகிறது மார்வெல். ஏ.ஆர்.முருகதாஸ் வசனம், ஏ.ஆர்.ரகுமான் இசை என தமிழர்களுக்கு பரிச்சயமான பிரபலங்கள் இதில் பணியாற்றி வருகின்றனர்.

இதில் புதிதாக இணைந்திருப்பவர் விஜய் சேதுபதி. இவர் இப்படத்திற்கு வாய்ஸ் கொடுத்துள்ளாராம். அதுவும் தோரின் அந்த அசத்தலான கதாபாத்திரத்திற்கு தானாம். இந்த தகவலை தற்போது நடைபெற்று வருகின்ற விழாவில் வெளியிட்டுள்ளனர். மேலும் நடிகை ஆண்ட்ரியாவும் இப்படத்தில் பிளாக் விண்டோ கதாபத்திரத்திற்கு டப்பிங் கொடுத்துள்ளார்.

Related Articles

Close