கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

ஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்

ஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் - கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பு
கமல்ஹாசன்
அன்னைய்யா எஸ்.பி.பி அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஏர்.ரகுமான்
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு பேரழிவு என ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆர்யா
எஸ்.பி.பி காலமான செய்தி கேட்டு மனமுடைந்தேன். உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவோம் சார். நீங்கள் தந்த இசைக்கும், நினைவுகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
விஷால்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. மெல்லிசை குரலின் சகாப்தம் முடிந்தது. இருப்பினும் அவரது பாடல்கள் என்றும் நம் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
அக்‌ஷய் குமார்
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு மெய்நிகர் இசை நிகழ்ச்சியின் போது நான் அவருடன் உரையாடினேன். அவர் மிகவும் அன்பானவர். வாழ்க்கை உண்மையிலேயே கணிக்க முடியாதது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

Related Articles

Close