கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

எஸ்.ஜே.சூர்யாவின் 2 படங்கள் எப்போது வரும்?

ஒரு படத்தைத் தயாரித்து முடித்தால் அந்தப்படம் ஓரிரு வருடங்களுக்குள் வெளியானால்தான் அது ஒரு புதிய படம் என்ற உணர்வை படம் பார்க்கும் பார்வையாளனுக்குத் தரும். சில பல காரணங்களால் ஓரிரு வருடங்கள் கழித்து வந்தால் அந்தப் படத்தில் ‘அப்டேட்’ என்ற விஷயங்கள் ‘ஓல்டு’ ஆகப் போய்விடும்.

எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இரண்டு படங்கள் முடிந்தும் மூன்று வருடங்களுக்கு மேலாக வெளியாகாமல் இருக்கின்றன. செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’, படமும் ‘மாயா, கேம் ஓவர்’ படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள ‘இறவாக்காலம்’ படமும் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
செல்வராகவன், அஷ்வின் சரவணன் இருவருமே தாங்கள் இயக்கிய படங்களால் நம்பிக்கை தரும் இயக்குனர்கள் எனப் பெயரெடுத்தவர்கள். இரண்டு படங்களின் டிரைலர்களை எப்போதோ வெளியிட்டு அதன் மூலம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்கள்.

ஓடிடி தளங்களில் சில படங்கள் தற்போது வெளிவரும் சூழலில் இப்படி சிக்கலில் சிக்கி தடுமாறிக் கொண்டிருக்கும் படங்கள் வெளிவந்தால் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

எஸ்.ஜே.சூர்யா, அமிதாப்பச்சன் இணைந்து நடிக்க ஆரம்பமான ‘உயர்ந்த மனிதன்’ படமும் அப்படியே நின்று போயுள்ளது.
Related Articles

Close