கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

எஸ்பிபியின் கடைசி பாடல் ‘அண்ணாத்த’ படத்திற்கா? டி.இமான் தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களின் கடைசி பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படத்திற்காக பாடப்பட்டுள்ளது என இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: எஸ்பிபி சார் அவர்களின் மறைவு பல இசை ரசிகர்களுக்கு ஏமாற்றம். எத்தனை ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். என்னுடைய இசை பயணத்தில் நான் சின்னத்திரையில் பணி புரிந்த போதும் சரி, பெரிய திரையில் பணிபுரிந்த போதும் சரி அவருடன் பணிபுரியும் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில் விஜய் நடித்த ’ஜில்லா’ திரைப்படத்தில் எஸ்பிபி அவர்கள் ஒரு பாடல் பாடியிருப்பார். அதன் பின்னர் ரஜினி அவர்களின் ‘அண்ணாத்த’ படத்தின் ஆரம்பப்பாடலை எஸ்பிபி அவர்கள் பாடியுள்ளார். அவருடைய கடைசி பாடல் ரஜினி அவர்களுக்காக என்னுடைய இசையமைப்பில் நடந்துள்ளது என்பதை பார்க்கும்போது நான் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டவனாக கருதுகிறேன்.

எவ்வளவு அன்பானவர், பண்பானவர், அற்புதமான மனிதர், இனிமையானவர், அவருக்கு இணை யாருமே இல்லை; இவ்வாறு டி.இமான் கூறியுள்ளார்.
Related Articles

Close