கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

என் கதையை திருடிவிட்டார்: கார்த்திக் சுப்புராஜ் மீது பிரபல எழுத்தாளர் குற்றச்சாட்டு!

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் என் கதையை திருடி விட்டார் என்று பிரபல எழுத்தாளர் ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஆந்தாலஜி திரைப்படம் ’புத்தம் புது காலை’. இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’மிராக்கிள்’ என்ற படமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிரபல எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா அஜயன்பாலா ’புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றுள்ள ’மிராக்கிள்’ என்ற படம் தன்னுடைய பல குறும்படம் ஒன்றில் அப்பட்டமான காப்பி என்று கூறியுள்ளார்

என்னுடைய கதையில் 10 பேர் இருப்பார்கள் என்றும், அதில் கதைகளம் பகல் என்றும் பேராசை பெருநட்டம் என்பதுதான் கதையின் கரு என்றும் கூறியுள்ளார். இந்த கதையை அப்படியே உல்டா செய்து 10 பேருக்கு பதிலாக இரண்டு பேர்களாகவும், கதைக்களம் பகலுக்கு பதிலாக இரவாகவும் மாற்றி உள்ளனர் என்றும் கூறியுள்ளார். மேலும் கிளைமாக்ஸில் டம்மி பணம் என்ற கான்செப்ட் ’மிராக்கிள்’ படத்திலும் உள்ளதால் அச்சு அசலாக இருப்பதால் இது என்னுடைய குறும்படத்தின் காப்பி தான் என்று அஜயன் பாலா கூறியுள்ளார்
மேலும் இந்த படத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹா தன்னுடைய நட்பு வட்டாரத்தில் இருப்பவர் என்றும் பல ஆண்டுகள் என்னுடன் பழகியவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபல இயக்குனர்களுக்கே கதைப்பஞ்சம் ஏற்பட்டு உள்ளதால் இவ்வாறு மற்றவர்களுடைய கதையை திருடி படம் எடுத்து வருகிறார்கள் என்றும் இது சினிமாவுக்கு ஆரோக்கியமானதல்ல என்றும் இதனை சட்டபூர்வமாக எதிர்கொள்ள வழி இருக்கிறதா என்றுதான் ஆலோசனை செய்து வருவதாகவும் எழுத்தாளர் அஜயன் பாலா தெரிவித்துள்ளார்

இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்ன பதில் அளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Related Articles

Close