திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? – சூர்யா பேச்சு

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகி வரும் ‘என்.ஜி.கே’ படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் தீபாவளிக்கு ரிலீசாகாது என்றும், விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. இதனால் சூர்யா ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர். இந்த நிலையில், 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் மூவிபஃப் இணைந்து நடத்தும் குறும்பட நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பங்கேற்றார்.
அதில் சூர்யா பேசும் போது,
படத்தை ஆரம்பிக்கும் போது, எப்படி முடிக்க நினைத்தோமோ அப்படி முடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். என்ஜிகே தீபாவளிக்கு வரமுடியவில்லை என்பதில் எங்களுக்கும் வருத்தம் இருக்கிறது. உங்களது நிலைமையும் புரிகிறது. அனைத்து இடங்களிலும் என்னனென்ன விஷயங்கள் நடக்கிறது, அதற்காக நீங்கள் என்னென்ன போராடுகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். அதற்கு இணையான பிரச்சனைகளை நாங்களும் சந்திக்கிறோம், அதை சமாளித்துக் கொண்டிருக்கிறோம்.
இது வழக்கமான ஒரு படமாக இருக்காது. வித்தியாசமான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் செல்வராகவனுடன் இணைந்தேன். படமும் சிறப்பாக உருவாகி வருகிறது. படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காகத் தான் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கிறது. தயாரிப்பு தரப்பும் அவர்களது கடமையை சரியாக செய்து வருகிறார்கள். படம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக காத்திருப்போம் என்றார். #NGK #Suriya

Related Articles

Close