கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

எனக்கு பாதுகாப்பு இல்லை.. முன்னணி ஹீரோவின் படத்தை நிராகரித்த காஜல் அகர்வால்

ரஷ்மிகா, கியரா போன்ற பல இளம் நடிகைகளின் வரவால் தற்போது நடிகை காஜல் அகர்வாலின் மார்க்கெட் சற்று ஆட்டம் கண்டு தான் வருகிறது என்று சொல்லலாம். தொடர்ந்து பல டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து வந்த அவரிடம் தற்போது சில படங்களே உள்ளன.
தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜலிடம் தெலுங்கு நடிகர் கோபிசந்த் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க கேட்டுள்ளனர்.

ஆனால் அந்த வாய்ப்பை காஜல் நிராகரித்துள்ளார். கதைப்படி படத்தின் ஷூட்டிங்கின் பெரிய பகுதி கர்நாடகாவின் காட்டுப்பகுதிகளில் நடக்கும் என கூறியுள்ளனர். அது தனக்கு பாதுகாப்பாக இருக்காது என கூறி காஜல் படத்தை நிராகரித்துவிட்டாராம்.
இதே காரணத்தை கூறி நடிகை ராஷி கண்ணாவும் கோபிசந்த் படத்தை நிராகரித்துவிட்டாராம். அதனால் படத்திற்கும் தகுந்த ஒரு புதுமுக நடிகையை தேடிவருகிறதாம் படக்குழு.

Related Articles

Close