குறும்படம்லேட்டஸ்ட்

ஊரடங்கை மையப்படுத்தி குறும்படம் இயக்கிய சுகாசினி

ஊரடங்கை மையப்படுத்தி குறும்படம் இயக்கிய சுகாசினி

25 ஆண்டுகளுக்கு முன் இந்திரா என்கிற படத்தை இயக்கிய நடிகை சுகாசினி, இந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டிலிருந்தபடியே ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். சின்னஞ்சிறு கிளியே என்கிற இந்த குறும்படத்தில் மலையாள நடிகை ஆகானா கிருஷ்ணா, கோமளம் சாருஹாசன், கிருஷ்ணன் ஆகியோருடன் தானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுஹாசினி.
எந்த தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியோ லைட்டிங் வசதிகளோ இல்லாமல் ஐ போன் மூலமாக இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார் சுகாசினி. ஊரடங்கு சமயத்து நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்தை விரைவில் வெளியிட இருக்கிறார்.
Related Articles

Close