கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

‘இந்தியன் 2’ படத்திற்கு புதிய சிக்கல்?

லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’.

2019ம் வருடம் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. சில நாட்கள் நடைபெற்ற பின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. அதற்குள் படம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் வதந்திகள் வெளியாகின. அதன்பின் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமானது. பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு நடைபெற்ற போது கிரேன் விழுந்து விபத்துக்குள்ளாகி மூவர் உயிரிழந்தனர்.

அதன்பின் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது. பிரச்சினைகளைத் தீர்த்து ஆரம்பிப்பதற்குள் கொரானோ ஊரடங்கால் படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்க முடியவில்லை. அடுத்து படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்று தெளிவாகத் தெரியாமலேயே உள்ளது. கமல்ஹாசன் அதற்குள் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை அறிவித்துவிட்டார்.
இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங், போதைப் பொருள் வழக்கு விவகாரத்தில் சிக்கியுள்ளார். கடந்த வாரம் விசாரணைக்கும் ஆஜரானார். அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவரைக் கைது செய்யவும் வாய்ப்புண்டு. அதனால், ‘இந்தியன் 2’ படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்தில் படத்தை ஆரம்பித்தார்களோ, சிக்கல் மேல் சிக்கலாக வந்து கொண்டிருக்கிறது.

Related Articles

Close