சின்னத்திரைபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

இது பிக்பாஸ் தானா? ஹிந்தி BB13ல் நடந்த சம்பவத்தை பார்த்து பலரும் ஆச்சர்யம்

பிரபலங்களை போட்டியாளர்களாக ஒரே வீட்டுக்குள் வைத்து அவர்களுக்குள் நடக்கும் விஷயங்களை படம் பிடித்து காட்டுவது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி.

அதில் பங்கேற்பவர்களுக்கு வெளியுலக தொடர்பே இருக்காது. வெளியில் போக முடியாது, செல்போன் இருக்காது என்பது தான் விதியாக உள்ளது. ஆனால் தற்போது ஹிந்தி பிக்பாஸ் 13வது சீசனில் நடந்துள்ள ஒரு சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக வந்த நடிகை தீபிகா படுகோன் போட்டியாளர்களை இரு அணிகளாக பிரித்து ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார்.

அந்த டாஸ்கில் ஜெயிக்கும் அணியினரை அவர் வெளியில் ஒரு ஜாலி ரைடு கூட்டிசெல்வேன் என கூறியுள்ளார். அதன்படி அவர் ஐந்து பிக்பாஸ் போட்டியாளர்களுடன் வெளியில் வந்து வண்டியில் ஊரை சுற்றியுள்ளார். அதன்பிறகு அவர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பியுள்ளனர்.

Image result for bigg boss 13 deepika padukone

 

 

 


Tags

Related Articles

Close