தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

இதுவரை எந்த படத்திற்கு இல்லாத சிறப்பை பெற்ற இளம் நடிகர்! அதிசயிக்க வைத்த பிளான்

கடந்த 2018 ம் ஆண்டில் வெளியான படங்களில் மிகவும் மறக்க முடியாத ஒன்று KGF. இளம் நடிகர் யாஷ் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ரூ 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியானது.

பாக்ஸ் ஆஃபிஸில் ரூ 250 கோடி வசூலை அள்ளி சிறந்த வசூல் செய்த படங்களில் ஒன்றாக இடம் பிடித்தது. இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் கடந்த இரு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

இந்த KGF 2 படத்திற்கு தற்போது ரூ 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டை ஒதுக்கி இருக்கிறார்களாம். இதனால் கன்னட சினிமாவில் ரூ 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்படும் முதல் படம் என்ற சிறப்பு KGF 2 படத்திற்கு கிடைத்துள்ளது.

Related Articles

Close