கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

இதனால் தான் பேட்டி கொடுப்பதில்லை, நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை: நயன்தாரா

நடிகை நயன்தாரா தான் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின். லேடி சூப்பர்ஸ்டார் என அனைவரும் கூறும் அளவுக்கு ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் அவர் தன்னுடைய எந்த படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை. பல சினிமா பிரபலங்கள் இதை குற்றச்சாட்டாகவும் கூறுகின்றனர்.

இது பற்றி நீண்ட வருடங்கள் கழித்து நயன்தாரா ஒரு மாத இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.
“நான் என்ன நினைக்கிறேன் என்பதை இந்த உலகம் தெரிந்துகொள்ள வேண்டாம் என நினைக்கிறேன். நான் தனிமையை விரும்பும் ஒருவர். கூட்டம் என்றால் எனக்கு சமாளிப்பது கடினம். பல சமயங்களில் நான் பேசியதை தவறாக மாற்றி சித்தரித்துவிடுகிறார்கள். அதனால் வரும் சிக்கல்களை சமாளிப்பது கடினமாக உள்ளது. என்னுடைய வேலை நடிப்பது மட்டும் தான். மாற்றதை என் படங்களே பேசும்” என கூறியுள்ளார் நயன்தாரா.

Related Articles

Close