கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

ஆர்யா திருமண வரவேற்பில் தல அஜித் கலந்து கொள்வாரா? எதிர்ப்பார்ப்பில் திருமண ஜோடி

நடிகர் ஆர்யா- நடிகை சாயிஷாவின் திருமணம் கடந்த சில நாட்களுக்கு நடந்தது. இத்திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றதால் தமிழ் சினிமா பிரபலங்கள் பெரும்பாலானோர் கலந்து கொள்ளவில்லை. சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட சிலர் மட்டும் தான் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று சென்னையில் ஆர்யா- சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இதில் அஜித்தும் கலந்து கொள்வாரா என்று திருமண ஜோடிகளால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மணமக்களை விட ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏனென்றால் அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார் ஆர்யா. ஆனால் தற்சமயம் நேர் கொண்ட பார்வை படப்பிடிப்பில் தீவிரமாக நடித்து வருவதால் இந்த நிகழ்ச்சியில் அஜித் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று தான் கூறப்படுகிறது.

Related Articles

Close