கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

அவேஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தில் விஜய்சேதுபதியே சேர்த்த புதிய இரு வார்த்தைகள்!

அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் வரும் 26ம் தேதி இந்தியாவில் ரிலீஸாக உள்ளது. படத்தின் தமிழ் ஆந்தமை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.அவெஞ்சர்ஸ் படத்தில் அயர்ன்மேனுக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார் விஜய் சேதுபதி. பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா டப்பிங் பேசியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆந்தம் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஜய் சேதுபதி, அவெஞ்சர்ஸ் படத்திற்கு டப்பிங் பேசுவதற்கு ஒப்புக் கொள்வதற்கு முன்பு பயந்தேன். என் டைமிங் வேறு, இன்னொரு நடிகரின் டைமிங்கை புரிந்து கொண்டு பேசுவது எப்படி என்று தெரியவில்லை. அது ரொம்ப கஷ்டம். எனக்கே நான் டப்பிங் பேசுவது கஷ்டமாக இருக்கும்.

உலகம் முழுவதும் பிரபலமான ஒரு கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளேன். நான் பயத்துடன், மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். படத்தில் சிறப்பு, நல்லா செய் என்பது போன்ற வார்த்தைகளை நான் சேர்த்துள்ளேன். இயல்பாக இருக்க வேண்டும் என்று நினைத்து பேசியுள்ளேன் என்றார்.

Related Articles

Close