லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பட வெற்றி குறித்து டைட்டானிக் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பதிவிட்ட சூப்பரான ட்விட்!

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அந்த படம் உலக அளவில் இதுவரை 2.189 பில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் அவெஞ்சர்ஸ் டைட்டானிக் படத்தின் வசூலை முந்தி உலக அளவில் அதிகம் வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. டைட்டானிக் 2.187 பில்லியன் டாலர் வசூலித்திருந்தது. 2.8 பில்லியன் டாலர் வசூலுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது அவதார் படம்.

இந்நிலையில் தனது பட வசூல் சாதனையை முறியடைத்ததை பாராட்டும் விதமாக டைட்டானிக் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ட்விட்டரில் அசத்தலான ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதை நீங்களே பாருங்கள்…

Related Articles

Close