கிசு கிசுலேட்டஸ்ட்

அவருடன் எனக்கு திருமணமா? சுஜா வருணி காட்டமான பதில்

நடிகை சுஜா வருணி கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் சில சர்ச்சைகளில் சிக்கினார். நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த பிறகு அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.



சமீபத்தில் சிவாஜி கணேசன் குடும்பத்தை சேர்ந்த நடிகர் சிவாஜி தேவ்வை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் என்றும் தகவல் பரவியது.

சமீபத்தில் அவர்கள் ஒன்றாக திருப்பதி சென்றிருந்ததால் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது என்றும் கூறப்பட்டது.

ஆனால் நடிகை சுஜா தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை முற்றிலும் மறுத்துள்ளார். “நாங்கள் சுப்ரபாதம் கேட்கவே ஒன்றாக சென்றோம். திருமணம் என தவறாக செய்தி பரப்ப வேண்டாம். என் திருமணம் பற்றி நிச்சயம் நானே அறிவிப்பேன்” என கூறியுள்ளார்.



Related Articles

Close