லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

அவதார் 2 ரிலீஸ் தள்ளிப்போனது! ஐந்தாம் பாகம் வரை புதிய ரிலீஸ் தேதி விவரம் இதோ

உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதல் இடத்தில் இருப்பது அவதார் படம் தான். ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இந்த படத்தின் அடுத்த பாகங்கள் தற்போது தயாராகி வருகிறது.

2020ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட அவதார் 2 தற்போது ஒருவருடம் தள்ளிப்போகிறது. 2021 டிசம்பர் 17ம் தேதி இரண்டாம் பாகம் வெளிவரும். டிஸ்னி நிறுவனம் ஸ்டார்வார்ஸ் படத்தின் ரிலீசுக்காக அவதார் ரிலீஸை தள்ளி வைத்துள்ளது.

அடுத்தடுத்த பாகங்கள் 2023, 2025 மற்றும் 2027 ஆகிய வருடங்களில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகவுள்ளது. அனைத்து பாகங்களில் ரிலீஸ் தேதியும் இதோ..

  • அவதார் 2 – 17 டிசம்பர் 2021
  • அவதார் 3 – 22 டிசம்பர் 2023
  • அவதார் 4 – 19 டிசம்பர் 2025
  • அவதார் 5 – 18 டிசம்பர் 2027

Related Articles

Close