தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

அர்ஜுன் ரெட்டி ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி.. அந்தப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் ஸ்ரீசுதா.. அந்த ஒரே படத்தின் மூலம் பிரபலமான இவர் கடந்த மார்ச் மாதம் அர்ஜுன் ரெட்டி படத்தின் ஒளிப்பதிவாளரான ஷ்யாம் கே.நாயுடு என்பவர் மீது போலீஸில் புகார் அளித்தார்.

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த சமயத்தில் தொடர்ந்து தன்னுடன் நெருக்கமாக பழகும்படி வற்புறுத்தியதாகவும் தனக்கு பட வாய்ப்புகளுக்கு சிபாரிசு செய்வதாக கூறியதாகவும் ஆனால் சொன்னபடி செய்யாமல் பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து போலீஸார் ஷ்யாம் கே.நாயுடுவை கைது செய்து விசாரித்தனர்.. பின்னர் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் ஸ்ரீசுதாவும் தானும் தங்கள் பிரச்சனையில் சாமாதானமாக போக முடிவுசெய்து விட்டோம் என கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஷ்யாம் கே.நாயுடு சில ஆவணங்களையும் சமர்ப்பித்தாராம். ஆனால் அந்த ஆவணங்களில் இருந்த ஸ்ரீசுதாவின் கையெழுத்து போலியானது என்பது தெரியவந்தது. இதனால் மோசடி மற்றும் ஏமாற்றுதல் என்கிற பிரிவுகளில் மீண்டும் ஷ்யாம் கே.நாயுடு மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

Related Articles

Close