பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

அம்மாவுக்கு கொரானோ இல்லை, ஆமீர்கான் மகிழ்ச்சி

பாலிவுட்டில் சில சினிமா பிரபலங்கள் வீட்டிலும் கொரானோ தொற்று பரவி உள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டுப் பணியாளர்களுக்கு கொரானோ தொற்று ஏற்பட்டத்தை அடுத்து நடிகர் ஆமீர்கான் வீட்டுப் பணியாளர்களுக்கம் கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரானோ பரிசோதனை மேற்கொண்டார் ஆமீர்கான். கடைசியாக நேற்று அவருடைய அம்மாவுக்கு கொரானோ பரிசோதனை மேற்கொள்ளப் போவதாகவும், அவருக்கு நெகட்டிவ்வாக அமைய வேண்டும் என பிரார்த்திக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
தற்போது அவருக்கு கொரானோ இல்லை என்பது தெரிய வந்துள்ளது. “எனது அம்மாவுக்கு கொரானோ இல்லை என்பது எனக்கு மிகப் பெரும் ஆறுதலாக உள்ளது. அனைவரது பிரார்த்தனைக்கும், நல்வாழ்த்துகளுக்கும் நன்றி,” என ஆமீர்கான் தெரிவித்துள்ளார்.

Related Articles

Close