கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

அடுத்த அடல்ட் காமெடி படம்! களத்தில் இறங்கும் பிக்பாஸ் பிரபலம்! ஜோடி இந்த நடிகையாம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 வரும் அக்டோபர் முதல் வாரம் ஒளிபரப்பாகவுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிகழ்ச்சியின் ஆரம்ப சீசன்களில் இருந்து இப்போது வரை சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. அதில் சிக்கியவர்களும் இருக்கிறார்கள். அதிலும் சீசன் 2 ஐ மறக்கமுடியுமா.

மங்காத்தா படத்தில் அஜித்துடன் முக்கியமான வேடத்தில் நடித்தவர் மஹத். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2விலும் கலந்துகொண்டு வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலே நடிகர் யாஷிகாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். அதே வேளையில் தனக்கு வெளியே பிராச்சி என்ற காதலி இருப்பதையும் கூறியுள்ளனார்.




பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிராச்சி மற்றும் மஹத் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அதன் பின் உத்தமன் என்னும் படத்திலும் நடித்துள்ளார்.

அடுத்ததாக நிதின் சத்யா தயாரிப்பில் அடல்ட் காமெடி கதையில் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.

இதில் அவருக்கு ஜோடியாக சில்லுக்கருப்பட்டி நிவேதிதா நடிக்க படத்தை அறிமுக இயக்குனர் அரவிந்த் இயக்குகிறாராம்.

Related Articles

Close