கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

அஜித், விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன்

அஜித், விஜய்க்கு வில்லனாக நடித்த நடிகருக்கு புதிய படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2’ படத்திலும், விஜய் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’ படத்திலும் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜாம்வால். பாலிவுட் நடிகரான இவர் சூர்யாவுக்கு நண்பனாக ‘அஞ்சான்’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் பாலிவுட்டில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

மகேஷ் மஞ்ரேகர் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக வித்யூத் ஜாம்வால் நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் வித்யூத் ஜாம்வாலுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதில் முக்கிய வேடங்களில் நஸ்ருதின் ஷா, அமோல் பலேகர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். தற்போது இப்படத்தின் முன்னணி வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே, ‘யாரா’ என்ற படத்தில் வித்யூத் ஜாம்வாலுடன் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close