கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

அஜித், விஜய் யாருக்கு அரசியல் செட்டாகும்? பிரபல இயக்குனரின் அசத்தலான பதில்

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் என இருவரையும் வைத்து படம் இயக்கியவர்கள் சிலர். அந்த சிலரில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவும் ஒருவர்.

இவரது நடிப்பில் கடந்த வாரம் மான்ஸ்டர் படம் வெளியாகியிருந்த நிலையில், இப்படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய எஸ்.ஜே.சூர்யாவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், அஜித், விஜய் இருவர்களில் யாருக்கு அரசியல் செட்டாகும் என கேட்ட கேள்விக்கு, அப்படியெல்லாம் சொல்லிட முடியாது. அவங்க என்ன விருப்பப்படுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி, விருப்பப்பட்டு அவங்களே அதற்கான ஸ்டெப் எடுத்து வைத்தால் அதில் சாதனை பண்ண கூடிய ஆட்கள். யார் முதலில் வைக்கிறார்கள் என்பதை தான் பார்க்கணும் என்றார்.

Related Articles

Close