கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

அஜித் எடுத்த அதிரடி முடிவு! மறக்க முடியாத முக்கிய நிகழ்வு – பெரும் திருப்பம்

அஜித் இன்று சினிமாவின் மிகுந்த உச்சத்தில் இருக்கும் ஒரு நபர். தமிழ் சினிமாவுக்கு வந்து பல சோதனைகளை கடந்து பெரும் சாதனை செய்தவர். தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாக வைத்து பல விமர்சனங்களை கடந்து தன் திறமையை நிலை நாட்டியுள்ளார். விளம்பரங்களை விரும்பாத இவர் எளிமையை கடைபிடிப்பதற்காக பல விசயங்களில் இருந்து தனித்து இருந்து வருகிறார்.



பள்ளிப்படிப்பு வரை பயின்று மெக்கானிக்காக பணியாற்றி தனி அனுபவத்தால் பைக் ரேஸ் விளையாட்டில் ஆரவம் கொண்டு சினிமாவுக்குள் நடிகரானவர். காதல் திருமணம், குடும்பம், சினிமாவை தாண்டி அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம், துப்பாக்கி சுடுதல் விளையாட்டு என திறமையாக செயல்பட்டு வருகிறார்.

அவர் மீது அரசியல் வலைகள பின்னப்பட்ட போது அதை தைரியமாக தகர்த்தெறிந்த அவரை இன்று அனைவரும் தல என கொண்டாடுகிறார்கள். ரசிகர்களின் நலனுக்கு தனக்கான ரசிகர்கள் மன்றங்களை நிராகரித்தவர்.

அன்று அசல் படம் வெளியாகும் நேரத்தில் அல்ட்மேட் ஸ்டார் என டைட்டில் கொடுத்தார்கள். ஆனால் அவர் தனக்கு அதில் விருப்பில்லை எனவே அதை விளம்பரத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என அறிக்கையும் விட்டிருந்தார். அதை ரசிகர்களும் உள்ளன்போடு ஏற்றுக்கொண்டார்கள். 10 வருடங்களுக்கு முன் நடைபெற்ற இந்த நிகழ்வு ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று.



Tags

Related Articles

Close