கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

அஜித்தால் மோகன்லால் படத்தை தள்ளி வைத்தாரா சிரஞ்சீவி?

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் கடந்த ஆண்டு ’சயிர நரசிம ரெட்டி’ படத்தின் மூலம் பிரமாண்டமாக ரீ-என்ட்ரி ஆனார் என்பதும் அந்த படத்தை அடுத்து தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் ’ஆச்சாரியா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளதால் சிரஞ்சீவியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் பிரபாஸ் நடிப்பில் உருவான ’சாஹோ’ படத்தை இயக்கிய இயக்குனர் சுஜீத்தின் இயக்கத்தில் லூசிஃபர் என்ற மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிப்பார் என்றும் இதுகுறித்து அறிவிப்பு அவருடைய பிறந்த நாளில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்தன. மோகன்லாலின் ‘லூசிஃபர் திரைப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் என்பதும், தமிழ் உள்பட பல மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி லூசிஃபர் ரீமேக்கில் நடிக்க சிரஞ்சீவி ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அஜித் நடித்த ’வேதாளம்’ திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க சிரஞ்சீவி ஆர்வமாக உள்ளதாகவும் இந்த படம் தான் சிரஞ்சீவியின் அடுத்த படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு வரும் 22ம் தேதி சிரஞ்சீவியின் பிறந்த நாளன்று அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தமிழில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய ‘வேதாளம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த திரைப்படத்தில் இரண்டு கெட்டப்புகளில் அஜித் நடித்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Related Articles

Close